சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க, ஜனவரி 18ஆம் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி இன்னும் ஓரிரு தினங்களில் முடிய உள்ள நிலையில், ஜெயலிதாவின் நினைவிடத்தை திறந்துவைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 18ஆம் தேதி டெல்லி சென்று பிரதமருக்கு அழைப்பு விடுக்கயிருப்பதாக தெரிகிறது.
மேலும், எடப்பாடி பழனிசாமி இன்று ஜெயலிதாவின் நினைவிடத்தை பார்வையிட்டு தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.