சென்னை: மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர், இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகிய பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த 1,000 ரூபாய் ஊக்கத் தொகையை 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
இதன் அடையாளமாக 18 மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். இந்தத் திட்டத்தில் ஓதுவார், அர்ச்சகர், இசை கற்போர் திட்டத்தில் பயன்பெறுவார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி உள்ளது.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 551 திருக்கோயில்கள் திருப்பணிகளுக்கு அனுமதி