சென்னை: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் எனச் சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுப் பதிலளித்தார்.தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.கவைச் சேர்ந்த உறுப்பினர் ஒரு பெரிய பட்டியலை வரிசைப்படுத்தி , இதையெல்லாம் தேர்தல் அறிக்கையிலே சொன்னீர்களே ஏன் செய்யவில்லை , ஏன் செய்யவில்லை என்று கேட்கிறார் . நீங்கள் தொடர்ந்து இரண்டு முறை அதாவது 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள் . நீங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் முழுமையாக செய்து முடித்து விட்டீர்களா ? என கேள்வி எழுப்பினார்.
அப்படிச் செய்து முடித்திருந்தால் , சொல்லுங்கள். பல வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றவேயில்லை. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அது மக்களுக்கும் நன்றாகத் தெரியும். நான் இப்போது சொல்கிறேன் . நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கக்கூடிய வாக்குறுதிகளை , உறுதிமொழிகளை , அதிலும் குறிப்பாக இந்த 10 மாதங்களில் , நாங்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகளைப் போல் எந்த ஆட்சியிலும் செய்யவில்லை என்பதை உறுதியோடு சொல்ல முடியும்.
எனவே விரைவிலே நீங்கள் என்னென்ன வாக்குறுதிகளை கேட்டிருக்கிறீர்களோ அவற்றையெல்லாம் பட்ஜெட்டிலும் சொல்லியிருக்கிறோம். எனவே நிச்சயமாக படிப்படியாக அவை நிறைவேற்றப்படும் . அதுதான் எங்களுடைய இலட்சியம் அதுதான் எங்களுடைய கொள்கை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை - ஓபிஎஸ்