சென்னை: சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் தீபக்குமார் (16). ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக பள்ளிக்கு சரிவர செல்லாததால் பெற்றோர் கண்டித்து உள்ளனர். இந்த நிலையில் காலில் அடிபட்டு இருந்த தீபக் குமாரை விடுமுறை முடிந்ததும் பள்ளிக்கு செல்லும்படி கண்டித்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தீபக்குமார் தலையில் அடிப்பட்டதால் அடிக்கடி தலை வலியால் ஆவதி பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபக் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார். தீபக்குமாருடன் மாலை நேரத்தில் விளையாடும் சக நண்பர்கள் வந்து ஜன்னல் வழியாக பார்த்த போது தீபக்கை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் ஆதம்பக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீபக் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நெல்லையில் பள்ளியில் அலுவலர்கள் நேரில் ஆய்வு