ETV Bharat / city

ஆண்கள் கையில் வரும் வருமானம் பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போயிடும்: வானதியின் பேச்சுக்கு ஆண் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு - BJP MLA Vanathi Srennivasan

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடந்த கேள்வி - பதில் நேரத்தில் வானதி சீனிவாசனின் ஆண்கள் குறித்த கருத்துக்கு ஆண் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆண்கள் கையில் வரும் வருமானம் பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போயிடும்: ஆண் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு

author img

By

Published : Apr 28, 2022, 8:29 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, மகளிர் சுய உதவிக்குழுக்கள் பற்றி பாஜக சட்டபேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி கேட்கும்போது, ஆண்கள் கையில் வரும் வருமானம் பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போயிடும். ஆனால் பெண்கள் கையில் கொடுக்கும் பணம் முழுக்க முழுக்க குடும்பச் செலவுக்கு பயன்படுகிறது எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேரவையில் இருந்த ஆண் எம்.எல்.ஏக்கள் சத்தம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். அதற்கு சபாநாயகர் அமைதி காக்கவும் எனத் தெரிவித்து, கேள்வி நேரத்தில் ’கேள்வியை மட்டும் கேளுங்கள்’ எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், ’மத்தவங்க எல்லாம் கொதிக்க வேண்டாம், எதற்கு கொதிக்க வேண்டும். நான் எல்லோரையும் சொல்லவில்லையே’ எனத் தெரிவித்தார்.

இதற்கு சபாநாயகர் யாரும் கொதிக்கவில்லைமா என்ற அவர் எல்லாரும் நன்றாகத்தா (Smooth ah) இருக்காங்க எனத் தெரிவித்தார். தொடர்ந்து வானதி சீனிவாசன் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் தொடர்பான கோரிக்கை வைத்த பிறகு, ’என்னுடைய கோரிக்கையை வைத்துவிட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்’ எனத்தெரிவித்தார்.

இதற்கு சபாநாயகர், ’போயிடாதீங்கம்மா. இருங்க’ என தெரிவித்து அமைச்சரை பதில் தர கூறினார்.

’ஆண்கள் கையில் வரும் வருமானம் பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போயிடும்’: ஆண் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு

இதையும் படிங்க:அடுத்த இரண்டு ஆண்டுகளில் 316 துணை மின் நிலையங்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.