சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 20ஆம் தேதி வரை நடந்தது. அடுத்ததாக ஆறு மாதத்திற்குள், அதாவது வரும் ஜனவரி 19ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும்.
அந்த வகையில், 2020 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். அன்று காலை 10 மணியளவில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். பின்னர், சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்படும்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் நடக்கும் கூட்டம் என்பதாலும், குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது தொடர்பாகவும் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘கிறிஸ்துமஸ் குடிலிலும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு’ - தூத்துக்குடி தம்பதியின் புரட்சிகர குடில்!