ETV Bharat / city

பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் - தமிழ்நாடு சட்டப்பேரவை

சட்டப்பேரவையில் இன்று (பிப். 5), ஆளுநர் உரை மீதான விவாதம்...!

author img

By

Published : Feb 5, 2021, 9:44 AM IST

Updated : Feb 5, 2021, 3:02 PM IST

15:00 February 05

சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.

14:56 February 05

சூதாட்டத்திற்கு எதிரான சட்ட முன்வடிவு தீர்மானம் நிறைவேற்றம்!

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் திருத்த சட்ட முன்வடிவு, பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

14:40 February 05

ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ் முதலமைச்சர் அறிவிப்பு!

2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் போராட்டத்தில் காவலர்களை தாக்கியது, தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட வழக்குகளை தவிர பிற வழக்குகள் திரும்ப பெறப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

13:32 February 05

 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு!

ஆளுநர் உரைக்கு பதிலுரை வழங்கிவருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 110 விதியின்கீழ் மொத்தமாக 644 அறிவிப்புகளை வெளியிட்டு,  அதில் 607 அறிவிப்பிற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

12:25 February 05

விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி -முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ரூ.12,110 கோடி விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் அரங்கில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

12:08 February 05

‘தமிழ்நாடு அமைதி மாநிலமாக மீண்டும் திகழ நடவடிக்கை வேண்டும்’ -தமீமுன் அன்சாரி கோரிக்கை!

தமிழ்நாட்டில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மூவரும் அண்ணன் தம்பி போல் பழகி வருகிறோம். கடந்தகாலங்களில் மாநிலத்தில் சமூக பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் சமூக கலவரங்களை ஏற்படுத்தும் வகையிலும் சிலர் ஈடுப்படுவருகிறார்கள். அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அமைதி மாநிலமாக மீண்டும் திகழ முதலமைச்சர் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் தமீமுன் அன்சாரி பேரவையில் கோரிக்கை வைத்தார்.

12:06 February 05

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தண்டனை அதிகரிப்பு சட்ட மசோதா தாக்கல்!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், குற்றவாளிகளின் தண்டனையை அதிகரிப்பதற்கான சட்ட மசோதாவை இன்று (பிப். 5) சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேரவையில் தாக்கல் செய்கிறார். பிரிவு 304இல் வரதட்சணை தொடர்பான குற்றத்துக்கான தண்டனையை 7லிருந்து 10 ஆண்டாக மாற்ற மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, பிரிவு 354இல் குற்றநோக்கத்துடன் ஆடை கலைத்தலுக்கான அதிகபட்ச தண்டனையும் 7லிருந்து 10 ஆண்டாகிறது.

11:48 February 05

சட்ட முன்வடிவுகள் அறிமுகம்

  • 2021ஆம் ஆண்டு இந்திய தண்டனைத் தொகுப்பு சட்டத் திருத்த முன்வடிவு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அறிமுகம்செய்தார்.
  • டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழக சட்ட முன்வடிவை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிமுகம்செய்தார்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிமுகம்செய்தார்.
  • தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி திருத்தச் சட்ட முன்வடிவை வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி அறிமுகம்செய்தார்.
  • தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் திருத்தச் சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம்செய்தார்.
  • தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிமுகம்செய்தார்.
  • தமிழ்நாடு நகராட்சி  திருத்தச் சட்டங்கள் முன்வடிவை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல்செய்தார்.
  • தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தச் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல்செய்தார்.

11:33 February 05

பேரவையில் இன்று தாக்கல்செய்யப்பட்ட மசோதாக்கள்

வினாக்கள் நேரம் முடிவுற்றதையடுத்து, மசோதாக்கள் தாக்கல்செய்யப்பட்டன. 

  1. 2021ஆம் ஆண்டு இந்திய தண்டனை தொகுப்பு தமிழ்நாடு திருத்த சட்ட முன்வடிவை சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தாக்கல்செய்தார்.
  2. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தாக்கல்செய்தார்.
  3. 2021ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்,  திருத்த சட்ட முன்வடிவை உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தாக்கல்செய்தார்.
  4. தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி திருத்தச் சட்ட முன்வடிவை வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பேரவையில் தாக்கல்செய்தார்.

11:09 February 05

தர்மபுரி சிப்கார்ட் தொழில்பேட்டையை விரைவில் முதலமைச்சர் தொடங்கிவைப்பார் -அமைச்சர் எம்.சி. சம்பத் 

தர்மபுரி சிப்கார்ட் தொழில்பேட்டை தொடங்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதிலும், சுற்றுச்சூழல் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. சாலைக்கான வழி அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இவை விரைவில் சரிசெய்யப்படும். பின்னர், முதலமைச்சர் இந்தத் தொழில்பேட்டையை விரைவில் தொடங்கிவைப்பார் எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார். 

11:06 February 05

 ‘நாட் அவுட் பேட்ஸ்மேன்கள்’ இபிஎஸ், ஓபிஎஸ் - ஓ.எஸ். மணியன் பாராட்டு!

மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றிபெறுவோம் என்று சூளுரைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், இபிஎஸ், ஓபிஎஸ் ‘நாட் அவுட் பேட்ஸ்மேன்கள்’ எனப் பாராட்டினார்.

10:54 February 05

காட்டுமன்னார்கோவிலில் துணைமின் கட்டடம் கட்டப்படும் - மின்சாரத் துறை அமைச்சர்

காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் முருகுமாறன், “காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பாளையங்கோட்டை ஊராட்சியில் 33 கேவி துணைமின் நிலையத்தை, 110 கேவி துணைமின் நிலையமாக தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மின்சாரத் துறைத் துறை அமைச்சர் தங்கமணி, “துணைமின் நிலையங்கள் அதிகமாக இருக்கிற காரணத்தினாலும், அப்பகுதி வேளாண் பகுதியாக இருப்பதினாலும் ஆய்வுசெய்து தேவை இருப்பின் அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று பரிசீலிக்கப்படும். அங்கே துணைமின் கட்டடம் வாடகையில் இருப்பதால் புதிய மின் கட்டடம் கட்டப்படும்” என்றார்.

10:08 February 05

பேரவையில் இன்று தாக்கல்செய்யப்படவுள்ள சட்ட மசோதாக்கள்

  1. வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கின்ற கல்லூரிகளையெல்லாம் ஒன்றாக இணைத்து, இந்தப் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது. விழுப்புரத்தில் அமைய உள்ள பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  2. உயர் கல்வித் துறையின்கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத் துறையின்கீழ் கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டுவந்த மருத்துவக் கல்லூரி இதன்மூலம் கடலூர் மருத்துவக் கல்லூரியாகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியும் சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (பிப். 5) சட்ட மசோதா தாக்கலாகிறது.
  3. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகப்படுத்துவது தொடர்பாக சட்ட மசோதா தாக்கல்செய்யப்படுகிறது.

09:04 February 05

சட்டப்பேரவையில் 2021ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 2ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. 3ஆம் தேதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று(பிப். 4) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது விவாதம் தொடங்கியது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசினார். 

அதுமட்டுமின்றி நேற்று(பிப். 4) சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்கும் சட்ட மசோதா உள்ளிட்டவை தாக்கல்செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்றும் (பிப். 5) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. விவாதம் முடிந்ததும் முதலமைச்சர் பழனிசாமி அதற்கான பதிலுரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விழுப்புரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க இன்று (பிப். 5) சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்செய்யப்படுகிறது.

Last Updated : Feb 5, 2021, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.