- அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நடந்த நேர்காணல் ஒரே நாளில் (மார்ச் 4) முடிவடைந்தது.
- நேர்காணல் ஒரே நாளில் முடிவடைவது இதுவே முதல் முறை என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021; அரசியல் கட்சிகளின் கூட்டணி நகர்வுகள் உடனுக்குடன்! - naam tamilar

22:55 March 04
ஒரே நாளில் முடிவடைந்த அதிமுக நேர்காணல்!

22:05 March 04
3ஆவது அணியில் நம்பிக்கை இல்லை - கே.எஸ். அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
- கூட்டணி தொடர்பாக யாரையும் சந்திக்கவில்லை.
- தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுகவிடமிருந்து அழைப்பு வரவில்லை. ஓரிரு நாள்களில் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்படும்.
- மூன்றாவது அணியின் மீது நம்பிக்கை இல்லை.
20:37 March 04
தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு திமுக அழைப்பு

திமுக தன் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டினை இன்னும் இறுதிசெய்யாமல் உள்ளது. இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினை வரும் மார்ச் 6ஆம் தேதி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி திமுக அழைத்துள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
19:19 March 04
திமுக - மதிமுக பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை: மல்லை சத்யா

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக-மதிமுக இடையே நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை என மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா கூறியுள்ளார். திமுக முன்வைக்கும் கூட்டணி நிலைப்பாட்டினைத் தங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றும், மீண்டும் திமுக அழைக்கும்பட்சத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
18:07 March 04
திமுக-சிபிஐ: தொகுதி உடன்படிக்கை நாளை கையெழுத்து - முத்தரசன்

சென்னை: திமுக தொகுதிப் பங்கீடு குழுவோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும், தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கையில் நாளை (மார்ச் 5) கையெழுத்திட இருப்பதாகவும் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
17:45 March 04
விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் விருப்ப மனு தாக்கல்

- தேமுதிக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் விருப்ப மனு தாக்கல்செய்துள்ளார். முன்னதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை விருப்ப மனு தாக்கல்செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
17:24 March 04
திமுக - சிபிஐ இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை

- திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடந்துவருகிறது.
- முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இழுப்பறி ஏற்பட்ட நிலையில், தற்போது திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவோடு முத்தரசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதில் 6 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
17:03 March 04
சத்தியமூர்த்தி பவனில் வீரப்ப மொய்லி நிர்வாகிகளுடன் ஆலோசனை

திமுக - காங்கிரஸ் இடையில் தொகுதிப் பங்கீடு இன்னும் முற்றுப்பெறாத நிலையில், இன்று சென்னை வந்த காங்கிரஸ் மூத்தத் தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி தற்போது சத்தியமூர்த்தி பவனில் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவருகிறார்.
14:29 March 04
விசிக திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

திமுக - விசிக கூட்டணி உடன்படிக்கை உறுதியான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழ்நாட்டை சூழ்ந்து இருக்கும் சனாதன சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பற்ற வேண்டிய யுத்தக்களமாக இந்த தேர்தல் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தை போல் தமிழ்நாட்டில் தில்லு முல்லு வேலைகளை செய்ய வேண்டும் என்று பாஜக முயற்சித்து வருகிறது. இங்கு திராவிட கட்சிகளை ஒழித்து சமூக நீதியை அழிக்க வேண்டும் என்று பாஜக செயல்பட்டு வருகிறது.
விசிக உயர்நிலை குழு கூட்டத்தில் நிர்வாகிகள் இந்த கூட்டணி உடன்பாடு வேண்டாம் என தெரிவித்தனர். இருப்பினும் தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டும், சனாதனத்திற்கு எதிரான வாக்குகள் விடுதலைச் சிறுத்தைகளால் சிதறக்கூடாது என்ற கொள்கை முடிவில் இந்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
தனித் தொகுதி, பொது தொகுதி என்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும். தனி சின்னத்தில் போட்டியிடுவோம். பெரியார், அண்ணா , கலைஞர் கட்டி காப்பாற்றிய சமூக நீதியை காக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த சூழ்நிலையில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
சசிகலா அரசியலை விட்டு விலகியுள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று. உண்மையில் அமைதியான வாழ்க்கை வேண்டும் என்ற முடிவா? இல்லை பாஜக அச்சுறுத்தலா என்பது குறித்து தெரியவில்லை. எடப்பாடி அதிமுக - அமமுக இணைய வேண்டும் என்பதை சசிகலா அறிக்கை வெளிபடுத்தியுள்ளது.
அதிமுக வலிமை பெறுகிறது என்றால் பாஜக பலம் பெறுகிறது என்று பொருள். அதிமுக வெற்றி பெற்றால் பாஜக வெற்றி பெறுகிறது என்று பொருள். அதிமுக, பாமக, பாஜக தங்கள் நலன்களை முன் நிறுத்தி சமூக நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கட்சிகள்” என்று கூறினார்.
13:25 March 04
திமுக கூட்டணியில் விசிக 6 இடங்களில் போட்டியிடும்!
திமுக - விசிக கட்சிகளுக்கிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2011ஆம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பது நினைவுக் கூரத்தக்கது.
13:18 March 04
காங்கிரஸ் அலுவலகத்திற்கு மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி வருகை!
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி சத்திய மூர்த்தி பவன் வருகை தந்துள்ளார். காங்கிரஸ் - திமுக கூட்டணி குறித்து உயர்மட்ட குழு தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளனர்.
12:56 March 04
ஆறு தொகுதிகளை ஏற்கமாட்டோம் - விசிக தொண்டர்கள் முழக்கம்
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கினால், அதனை ஏற்கக் கூடாது என தொடண்டர்கள் கட்சி அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரட்டை இலக்கில் தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
12:56 March 04
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னை இல்லை - குண்டுராவ்
திமுக - காங்கிரஸ் கூட்டணி பரபரப்புகளுக்கு இடையில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி. தங்கபாலு சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்துள்ளார். இதனிடையில், திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை எனவும், விரைவில் சுமூக முடிவு எட்டப்படும் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் பேட்டியளித்துள்ளார்.
12:42 March 04
மநீம, அமமுகவுடன் கூட்டணி வைக்கலாம்! நிர்வாகிகள் கருத்து

திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இழுபறி நீடித்துவரும் நிலையில், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் 50 தொகுதிகள் கோரப்பட்டு வரும் நிலையில், திமுக சார்பில் 25 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 40 தொகுதிகளுக்கு கீழ் ஒதுக்கினால், கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து போட்டியிடுவோம் என பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இல்லாவிடில் மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் எனவும் நிர்வாகிகள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
11:46 March 04
தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தாக்கல் செய்துள்ளார்.
11:34 March 04
திமுக - கொ.ம.தே.க கூட்டணி பேச்சுவார்த்தை

திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சு வார்த்தை முடிந்துள்ளது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு பங்கேற்றது.
11:05 March 04
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம், மாநிலச் செயலாளர் முத்தரசன், மூத்தத் தலைவர் நல்லகண்ணு ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
10:43 March 04
திமுக - விசிக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடரும் இழுப்பறி!

நேற்று (மார்ச்.3) மாலை திமுக உடனான கூட்டணி குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விசிக பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. தொகுதிப் பங்கீட்டில் முடிவு எட்டப்படவில்லை என்பதால் விசிக வரவில்லை எனக் கூறப்பட்டது.
09:48 March 04
அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது.