சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று (டிசம்பர் 13) வேளாண்மைத் துறை அலுவலர்களின் உபயோகத்திற்காக ரூ.53.23 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள ஏழு புதிய பொலிரோ வாகனங்களை அலுவலக உபயோகத்திற்காகக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
பின்னர், வேளாண்மைத் துறை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சமயமூர்த்தி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை ஆணையர் எஸ். நடராஜன், வேளாண் துறை இயக்குநர் ஆ. அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர். பிருந்தா தேவி, வேளாண் துறை கூடுதல் இயக்குநர் ஷ்ரவன் குமார் ஜடாவத், துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அரசிற்கு முதுகெலும்பு உள்ளதா? - எச். ராஜா விமர்சனம்