இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
”தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திருநெல்வேலியில் திமுக முன்னால் மேயர் உமா மகேஸ்வரி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்யும் இரண்டாவது சம்பவம் இது. சொத்துப் பிரச்னையா அல்லது உட்கட்சி பிரச்னையா என்பது தெரியவில்லை.
இதேபோல் மதுரையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மேலும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சண்டையிட்டுக்கொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டிய காவல் துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னடைய கருத்து” என்றார்.