தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மலேசியா உள்பட மொத்தம் 30 நாடுகளிலிருந்து 86 பேர் கலந்துகொண்டனர்.
அதில் இந்தியா சார்பில் எட்டு பேர் கலந்துகொண்டனர். அப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ சாய் சரவணன் (16) கலந்துகொண்டு வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து நாடு திரும்பிய ஸ்ரீ சாய் சரவணனுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீ சாய் சரவணன், தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா உள்பட 30 நாடுகள் கலந்துகொண்டன. போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என தெரிவித்த ஸ்ரீ சாய் சரவணன், வாள்வீச்சுப் போட்டியில் மேலும் பயிற்சி பெற போதிய வசதிகள் இல்லாததால் தமிழ்நாடு அரசு உதவியும் ஊக்கமும் அளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு