ETV Bharat / city

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் - TAMILNADU RAIN FORECAST REPORT

தெற்கு வங்கக் கடல் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று, வடக்கு வடகிழக்கு திசையில் நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுபகுதி

author img

By

Published : Mar 17, 2022, 2:10 PM IST

சென்னை: நேற்று(மார்ச்.16) காலை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 19 ஆம் தேதி காலை நிலவக்கூடும்.

இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 21 ஆம் தேதி மேலும் புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் 22 ஆம் தேதி காலை நிலைபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்று(மார்ச்.17) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை(மார்ச்.18) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 19 முதல் 21 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

17.03.2022 முதல் 18.03.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19.03.2022: அந்தமான் கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.03.2022:அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.03.2022:அந்தமான் கடல் பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: சிசிடிவி கேமரா மூலம் பிடிபட்ட கொள்ளையர்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.