ETV Bharat / city

9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
author img

By

Published : Feb 22, 2022, 1:41 PM IST

சென்னை: வட உள் கர்நாடகாவிலிருந்து தென் தமிழ்நாடு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று(பிப்.22) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.

23.02.2022: தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.

24.02.2022:தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.

25.02.2022: தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.

26.02.2022: தென் தமிழ்நாடு மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இதையும் படிங்க: 22 வயது வேட்பாளர் வெற்றி - சென்னை மேயர் பதவி கிடைக்குமா...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.