ETV Bharat / city

இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை: கட்சிகளுக்கு கடிவாளம் போட்ட ஆணையம்!

இன்று மாலையுடன் தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நிறைவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிகட்ட வாக்குச் சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நிறைவு

author img

By

Published : Apr 4, 2021, 7:09 AM IST

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 6 ) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக பரப்புரையைத் தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்தது.

இந்த நிலையில் இன்று மாலை 7 மணிவரை தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அறிவித்திருந்தார். வழக்கமாகத் தேர்தல் பரப்புரை இறுதிநாளில் மாலை 5 மணியுடன் பரப்புரை முடிவடையும்.

ஆனால் இந்த முறை 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கி, மாலை 7 மணி வரை அனைத்து அரசியல் கட்சிகளும் பரப்புரை மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நிறைவு
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நிறைவு

கட்டுப்பாடுகள் தீவிரம்

மேலும் இது தொடர்பாகப் பேசியுள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, "இன்று இரவு 7 மணிக்கு மேல், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற வேண்டும். தேர்தல் தொடர்பான ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது. இன்று இரவு 7 மணிமுதல் வாக்குப்பதிவு முடியும் வரை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதியை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

மேலும் தேர்தலையொட்டி இன்றுமுதல் அடுத்த மூன்று நாள்களுக்கு மதுபான கடைகளை மூடவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

144 தடை உத்தரவு

இதேபோன்று புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. இதனால் புதுச்சேரியல் அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் தேர்தலை முன்னிட்டு, இன்று மாலை 7 மணி முதல் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.