ETV Bharat / city

'தமிழ்நாட்டில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்' - பொது சுகாதாரத்தறை இயக்குநர் தகவல் - ஒமைக்ரான்

தமிழ்நாடு சுகாதாரத்துறை கிராமங்கள் வாரியாக, இதுவரையில் கரோனாவிற்கான தடுப்பூசி செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட்டு, நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்று பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாம்
author img

By

Published : May 5, 2022, 9:18 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கிராமவாரியாக தடுப்பூசி போடதவர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ள தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா 4ஆவது அலை பரவாமல் தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி வரும் 8ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்கள் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளன. இதுகுறித்து அதன் இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'தமிழ்நாட்டில் 1.50 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

இதனால், கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் வகையில், கிராம வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு https://tndphpm.com என்ற பொது சுகாதாரத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தடுப்பூசி போடாதவர்களின் பெயர், மொபைல் எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் போட்ட நாள், இரண்டாம் டோஸ் போட வேண்டிய நாள், முதல் டோஸ் போட்டு எத்தனை நாட்கள் ஆகியுள்ளன போன்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலைக் கொண்டு கிராம வாரியாக தடுப்பூசி முகாம்களும், தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்களும் அமைக்கப்படும். அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, அடுத்த அலை வருவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.181 கோடி செலவில் புதிய பள்ளிக் கட்டடங்கள்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.