சென்னை: எழும்பூர் மகப்பேறியல் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனைக்கு நோய்த்தொற்று அழிக்கும் கலன்களை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வழங்கியுள்ளது.
கரோனா வைரஸ் தாெற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை அரசுக்கும், மருத்துவமனைகளுக்கும் வழங்கிவருகிறது. அதேபோல் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் சங்கங்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கிவருகின்றனர்.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இந்நிலையில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி 68 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் எழும்பூர் மகப்பேறியல் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனைக்கு இரண்டு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நோய்த்தொற்று கிருமிகளை அழிக்கும் கலன்கள் அதன் பொதுச்செயலாளர் தாஸ், தலைவர் லட்சுமிபதி ஆகியோரால் வழங்கப்பட்டன.