சென்னை குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா மருத்துவமனையில், மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனோ தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். மருத்துவமனை தலைவர் டாக்டர் முகமது ரேலா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “அரசு மருத்துவமனைகளில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதற்கு அடுத்தப்படியாக பல்வேறு பாதிப்புக்கு உள்ளானவர்கள், 50 வயதுக்கு அதிகமானவர்கள், அதன் பின்னர் பொதுமக்கள் என படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும்.
கரோனோ நோய்த் தடுப்பு பணிகளில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. அதேபோல் கரோனோ தடுப்பூசி போடும் பணியிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும்” என்றார்.
இதையும் படிங்க: இதுவரை தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்கவிளைவு ஏற்படவில்லை- ராதாகிருஷ்ணன்