சென்னை: தென்காசி மாவட்டம் குருவிக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு பறையர் பேரவையின் தலைவரான வெற்றிமாறன் மனுதாக்கல் செய்தார்.
அவர் போட்டியிட அளித்த மனுவை, சிலர் பணம் கொடுத்து நிராகரிக்க செயததாககூறியும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆட்கள் தனக்கு மிரட்டல் விடுவதாக தெரிவித்தும், கடந்த மாதம் 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
உயிரிழப்பு
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
45 விழுக்காடு தீக்காயங்களுடன் கடந்த ஒருவாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெற்றிமாறன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.