ETV Bharat / city

'தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே' - திமுகவின் அறிவிப்பிற்கு தமிழ்த் தேசிய பேரியக்கம் வரவேற்பு - DMK Impact on election manifesto

திமுகவின் தேர்தல் அறிக்கையில், "தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் 100 % பணிகளிலும், தனியார் தொழில் நிறுவனங்களில் 75% பணியிடங்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களையே அமர்த்த சட்டம் கொண்டு வரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டதற்கு தமிழ்த் தேசிய பேரியக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

'தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே' - திமுகவின் அறிவிப்பிற்கு தமிழ்த் தேசிய பேரியக்கம் வரவேற்பு

author img

By

Published : Mar 15, 2021, 7:42 PM IST

தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த போராட்டங்கள்:

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "1991ஆம் ஆண்டு காஞ்சிபுரம் – அய்யம்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முதல் மாநாட்டில், தமிழ்நாட்டு தொழில் – வணிகம் – வேலை அனைத்தும் தமிழர்களுக்கே எனத் தீர்மானம் இயற்றினோம். தொடர்ந்து, 1994இல் மார்வாடிக் கடைகள் முன் மறியல் போராட்டம், 2005ஆம் ஆண்டு ஈரோட்டில் 'வெளியாரை வெளியேற்றுவோம்' மாநாடு, 2008இல் திருச்சியில் பி.எச்.இ.எல். நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து மறியல் போராட்டம், 2011இல் மலையாள ஆலூக்காஸ் நகை நிறுவனத்தை வெளியேற்றக் கோரும் போராட்டம், ஆவடி எச்.வி.எப். திண்ணூர்தி தொழிற்சாலையில் தமிழர் புறக்கணிப்புக்கு எதிரான போராட்டம்,

போராட்டங்களின் போது தமிழ்த் தேசிய பேரியக்கம் வெளியிட்ட துண்டறிக்கை

2014இல் சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு வடமாநிலத்தவருக்கு எதிரான முற்றுகைப் போராட்டம், 2016இல் திருச்சி தென்னகத் தொடர்வண்டித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை, 2017இல் தமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசு நிறுவனங்களின் முன்பு தமிழர்களுக்கே வேலை கேட்டு ஆர்ப்பாட்டம், 2018இல் சென்னையில் 'தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே' சிறப்பு மாநாடு, 2019இல் திருச்சி பொன்மலை பணிமனையின் முன்பு முற்றுகைப் போராட்டம், 2019இல் சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு மனிதச்சுவர் போராட்டம், 2020இல் திருச்சி பொன்மலை பணிமனையில் ஒரு வார கால தொடர் மறியல், வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த போராட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொன்றும் முத்திரைப் பதித்தவை.

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே:

தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய போராட்டங்கள்தான் அரசியல் கட்சிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு திமுகவின் தேர்தல் அறிக்கை ஓர் சான்று. 2019 பொன்மலையில் பயிற்சிப் பழகுநர் வேலையில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக நடத்திய முற்றுகைப் போராட்டத்தின்போது, #TamilnaduJobsForTamils என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியபோது, தமிழ்நாட்டு இளைஞர்கள் அதை வைரலாக்கினர். அப்போது, திமுகவின் 'முரசொலி' நாளேட்டில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இந்த முழக்கம் ஏற்கத்தக்கது என்று தலையங்கம் எழுதினார்கள்.

தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி

இப்போது, தேர்தல் அறிக்கையிலும் இதை வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டு வேலைகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்களுக்கே என்ற நம் போர் முழக்கம் அனைத்துத் தளங்களிலும் இன்னும் விரிவடைய அயராது உழைப்போம்! உறுதியாக வெல்வோம்! " என்று கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.