ETV Bharat / city

சென்னையில் புதிய பன்னாட்டு விமான நிலையம் - தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு

தமிழ்நாடு அரசு இன்று (ஏப்.19) வெளியிட்டுள்ள தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு விமானநிலையம்
பன்னாட்டு விமானநிலையம்
author img

By

Published : Apr 20, 2022, 6:16 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஏப்.19) கனிம வளங்கள் துறை, தொழில்துறை, தமிழ் வளர்ச்சித்துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. முன்னதாக, கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்ததைத் தொடர்ந்து, தொழிற்துறையின் விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 'சிப்காட் நிறுவனம் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வீட்டு வசதிகள், புத்தாக்க மையங்கள், வணிக வசதி மையங்கள், ஆயத்ததொழிற்கூட வசதிகள் போன்ற சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

* தமிழ்நாடு பாதுகாப்பு தொழிலாக வழித்தடத்தில் ஒரு பகுதியாக ஒரு வானூர்தி மையத்தை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள வானூர்தி தொழில் பூங்காவின் அமைவிடத்தை டிட்கோ நிறுவனம் நிறுவி வருகிறது. இமயம் வானொலி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கான உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையம் வானூர்தியின் மின்னணுவியல் உதிரி பாகங்கள் உற்பத்தி வளாகம் பரிசோதித்து சான்றிதழ் வழங்கும் வசதி போன்ற வசதிகளை கொண்டதாக அமையும். இதற்கான முதற்கட்ட பணிகள் சுமார் ரூ.230 கோடி செலவில் 3.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைட்டில் பார்க் சென்னை நிறுவனத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் பிப்.2023 ஆம் ஆண்டு நிறைவடையும்.

* டிட்கோ நிறுவனம் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் இணைந்து திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைய உள்ளது.

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதி தொழிற்சாலைகளுக்கான மையமாக இருப்பதால் ஓசூரில் "புதிய விமான நிலையம்" அமைப்பதற்கு இப்பகுதியை சுற்றியுள்ள விமான போக்குவரத்துத்துறை மற்றும் அதன் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாத்தியக்கூறு உள்ள இடங்களை ஆய்வு செய்யுமாறு டிட்கோவை அரசு பணித்துள்ளதாகவும், அரசின் அறிவுறுத்தலின்படி ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரு ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் டிட்கோ ஈடுபட்டுள்ளது.

* அதிகரித்து வரும் விமான பயணிகள் போக்குவரத்தை கையாள்வதற்காக "புதிய விமான நிலையம்" அமைக்கும் பொருட்டு டிட்கோ நிறுவனம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையமும் (Airport Authority of India) இணைந்து தற்போதைய வசதிகளை விரிவுப்படுத்துவதன் மூலம் சென்னை விமான நிலையத்தின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விமானப் போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்கும், சென்னை அருகே ஒரு "புதிய பன்னாட்டு விமான நிலையம் ஒன்றை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மேலும், பன்னாட்டு விமான நிலையம் உருவாக்குவதற்கான சாத்தியம் உள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கான பணியை அரசு, டிட்கோவிடம் ஒப்படைத்துள்ளது. சாத்தியமுள்ள நான்கு இடங்களை தேர்வு செய்து இவ்விடங்களில் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்தை கேட்டுக்கொண்டதாகவும், 4 இடங்களிலும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகளின் குழு பார்வையிட்டு அதன் சாத்தியக்கூறு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அறிக்கையின் அடிப்படையில் பொருத்தமான இடம் இறுதி செய்யப்பட்டு புதிய விமான நிலையத்தை நிறுவுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* இயற்கை எரிவாயு குழாய் அமைப்பு திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் 1,224 கி.மீ., நீளத்துக்கும், கெயில் நிறுவனம் 319 கி.மீ., நீளத்துக்கும் செயல்படுத்தி வருவதாகவும், பெட்ரோலிய பொருட்களுக்கான குழாய் அமைப்பு திட்டத்தை HPCL நிறுவனம் 700 கி.மீ., நீளத்துக்கும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேசன் லிட்., நிறுவனம் 320 கி.மீ., நீளத்துக்கும், கொச்சின் - சேலம் பைப்லைன் பிரைவேட் லிட்., நிறுவனம் 210 கி.மீ., நீளத்துக்கும் செயல்படுத்தி வருவதாகவும், இதன் மூதலீடு ரூ.14,200 கோடியாக உள்ளதாகவும் தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கான வரைவு கொள்கையை, மாநில அளவில் டிட்கோ தயாரித்துள்ளதாகவும், நகர எரிவாயு விநியோக வலையமைப்பை, மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் செயல்படுத்த அனுமதி பெற்றுள்ள 7 CGD நிறுவனங்களுடன், டிட்கோ ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், 2,785 விற்பனை நிலையங்களில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவும், 22,794,795 வீடுகளுக்கு குழாயின் மூலம் இயற்கை எரிவாயுவும் வழங்குவதற்கான இத்திட்டம், ரூ.35,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்றும், 8 ஆண்டுகளில் பணி நிறைவடையும்' என்று அந்த தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் தொடங்கிய பன்னாட்டு விமான சேவை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.