ETV Bharat / city

தமிழக அரசின் ’1100’ சேவை இன்று முதல் தொடக்கம்!

சென்னை: தமிழக அரசின் உதவியை பெற ’1100’ சேவை எண் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

function
function
author img

By

Published : Feb 13, 2021, 1:16 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 15.9.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து அவற்றிற்குத் தீர்வு காண, "முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று, பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு தெரிவித்து விரைந்து தீர்வு காணும் வகையில், 69 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்ட, “முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மைத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

அதோடு, பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் ’1100’ மூலம் தெரிவிக்கும் வகையில், சென்னை, சோழிங்கநல்லூரில் 12 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 இருக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் உதவி அழைப்பு மையத்தையும் அவர் இன்று திறந்து வைத்தார்.

தமிழக அரசின் ’1100’ சேவை இன்று முதல் தொடக்கம்!
தமிழக அரசின் ’1100’ சேவை இன்று முதல் தொடக்கம்!

இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமில்லா தொலைபேசி எண் ’1100’ வாயிலாக தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு 24 மணிநேரமும் CMHelpline.tnega.org என்ற இணையதளம் வாயிலாகவும், cmhelpline@tn.gov.in என்று மின்னஞ்சல் வாயிலாகவும், CMHelpline Citizen என்ற கைப்பேசி செயலி வாயிலாகவும், https://twitter.com/cmhelpline_tn என்ற டிவிட்டர் வாயிலாகவும், https://www.facebook.com/CM-Hepline-TN என்ற ஃபேஸ்புக் வாயிலாகவும் பதிவு செய்யலாம். இதன் மூலமாக பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ்! - விவசாயிகளிடம் முதலமைச்சர் வழங்கினார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.