சென்னை: இன்றும், நாளையும், முழு ஊரடங்கு இல்லை என அரசு அறிவித்துள்ளதால், பொது மக்கள் தங்களுக்குத் தேவைக்கேற்ப பொருட்களை வாங்கி சேமித்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை முந்தையை அரசு அமல்படுத்தியிருந்தது. இதனால் நாளை என்ன நிலை என பொது மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதையொட்டி இன்றும், நாளையும் கடைகள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தில் முழு ஊரடங்கு மே 10ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இன்றும் (மே 8) நாளையும் (மே 9) அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயங்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.