சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 5 ஐபிஎஸ் அலுவலர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வும், 3 ஏடிஜிபிக்களுக்கு பணியிட மாற்றம், 2 ஏடிஜிபிகளுக்கு கூடுதல் பொறுப்பு மற்றும் ஒரு ஐஜிக்கு பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு வெளியிட்ட உத்தரவில், "சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல் ஆணையராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இதேபோல் காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் ஏ.கே விஸ்வநாதன், குடிமைபொருள் குற்றப்புலனாய்வு துறை டிஜிபி அபாஷ் குமார், அயல்பணியில் உள்ள ரவிசந்திரன், சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி சீமா அகர்வால் ஆகிய 5 ஐபிஎஸ் அலுவலர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், தலைமையிட ஏடிஜிபியாக இருந்த சங்கர் அட்மின் ஏடிஜிபியாகவும், சைபர் கிரைம் விங்க் ஏடிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் தலைமையிட ஏடிஜிபியாகவும், தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபி அமரேஷ் புஜாரி சைபர் கிரைம் விங்க் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி வினித் தேவ் வாங்கடே கூடுதல் பொறுப்பாக தொழில்நுட்ப பிரிவு கவனித்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு பொறுப்பை கூடுதலாக கவனிக்கவும், சிபிசிஐடி குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி கபில் குமார் சாரட்கர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: வீரப்பன்.. விஜய குமார்.. பட்டுக்கூடு.. நடந்தது என்ன?