தமிழ்நாடு அரசு டிசம்பர் 6ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை குடிசைவாழ் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி இந்தத் திட்டத்தை டிசம்பர் 6ஆம் தேதி அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கிவைத்தார். அன்றிலிருந்து காலை உணவாக உப்புமா, கிச்சடி, மதிய உணவாக சாம்பார் சாதம், இரவு உணவாக லெமன் சாதம், தக்காளி சாதம் என வழங்கப்பட்டுவருகிறது.
இந்த நான்கு நாள்களில் 76 லட்சத்து 39 ஆயிரத்து 708 நபர்களுக்கு (76,39,708) இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும் மாநகராட்சியின் அறிவிப்பில், சராசரியாக காலை 24 லட்சத்து 87 ஆயிரத்து 856 பேருக்கும் (24,87,856), மதியம் 25 லட்சத்து 75 ஆயிரத்து 906 பேருக்கும் (25,75,906), இரவு 25 லட்சத்து 75 ஆயிரத்து 946 பேருக்கும் (25,75,946) உணவு வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.