மாவட்ட வருவாய் அலுவலர்களை இடமாற்றம் செய்தும் துணை சேகரிப்பாளர்களை ( Deputy collector) மாவட்ட வருவாய் அலுவலர்களாக நியமித்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையின் படி, ஜெயராஜ், டாக்டர்.ஆர்.சுமன், டாக்டர்.ஆர்.சுகுமார், பி.முருகேசன், ஆர்.மங்கள ராமசுப்பிரமணியன், ஆர்.ராஜகிருபாகரன், திரு வி.ரவிச்சந்திரன், ஜி.சரவணமூர்த்தி, ஆர்.கோவிந்தராசு,
பி.முத்துராமலிங்கம், பி.அருண் சத்யா, பி.அரவிந்தன் உள்ளிட்ட 23 மாவட்ட வருவாய் அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் குறிப்பாக, சென்னை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் எஸ்.அசோகன், இடமாற்றம் செய்யப்பட்டு, கோவை விமான நிலைய விரிவாக்க துறையில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவராகவும், கோவை கார்ப்பரேஷனின் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்னா ராமசாமி இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை கார்ப்பரேஷன் மண்டல அலுவலராகவும் பதவி வகிக்கவுள்ளனர்.
இதேபோல, இந்த ஆணையின் படி, கே.ராமமூர்த்தி, எஸ்.ஜெயச்சந்திரன், எஸ்.மதுராந்தகி, பி.சுபா நந்தினி, உமா மகேஸ்வரி ராமச்சந்திரன், எஸ்.எச்.ஷேக் மொஹிதீன், ஜி.செந்தில்குமாரி, கீதா, டாக்டர்.எஸ்.செல்வ சுரபி, தேவி, எஸ்.தங்கவேலு உள்ளிட்ட 32 துணை சேகரிப்பாளர்களை ( Deputy collector) மாவட்ட வருவாய் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் குறிப்பாக, சென்னை உதவி ஆணையர் எஸ்.ஜெயச்சந்திரன் மாவட்ட வருவாய் அலுவலராகவும், கோவை துணை ஆட்சியர், கலால் மேற்பார்வை அலுவலருமான மதுராந்தகி மாவட்ட வருவாய் அலுவலராகவும் சென்னை வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர், பி.சுபா நந்தினி, ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர்.
இதையும் படிங்க; புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கு: பெண் மந்திரவாதி கைது