இது தொடர்பாக, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அஸ்வத் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வேளையில், பொதுமக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திவருகிறது. இதன் காரணமாக, நர்சிங், ஆயுர்வேதம், பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்தவுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. மேலும், மருத்துவ மாணவர்களுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
பார்மசி மாணவர்களுக்கான தேர்வு தேதி ஏப்ரல் 15க்கு பின் அறிவிக்கப்படும். எனவே, மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாஸ்க், சானிடைசரை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும்! - அரசு எச்சரிக்கை