சென்னை : சுகாதாரத்துறை இன்று (செப்.7) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 685 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,544 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை நான்கு கோடியே 25 லட்சத்து 32 ஆயிரத்து 566 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 26 லட்சத்து 25 ஆயிரத்து 778 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 205 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,576 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
ஆக, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 74 ஆயிரத்து 518 என உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 5 நோயாளியும் அரசு மருத்துமனையில் 14 நோயாளிகளும் என 19 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 55 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 169 நபர்களுக்கும் கோவை மாவட்டத்தில் 206 நபர்களும் அதிக அளவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பன்னாட்டு மாரத்தான், ரூ.56 லட்சம் கரோனா நிதி வழங்கல்