ETV Bharat / city

'ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம் கூட நிறைவேற்றத் தயார்' - கே.எஸ்.அழகிரி பேச்சு

காங்கிரஸ் கட்சிக்கு கூட்டுத் தலைமை தேவை இல்லை. ராகுல் காந்தியை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றவும் தயார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கேஎஸ் அழகிரி
கேஎஸ் அழகிரி
author img

By

Published : Mar 21, 2022, 9:16 PM IST

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், தமிழ் மாநில காங்கிரஸின் பொதுச் செயலாளர் திருவொற்றியூர் சுகுமாரன் அவரது 300 ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். அவர்களை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ் அழகிரி, 'தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக விச்சு லெனின் பிரசாத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூரில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் உறுதிமொழி ஏற்கிறார்கள்.

பாஜக பரிந்துரை

காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது உண்மை. ஆனால், அது ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோதோ இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதோ ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோதோ அல்ல. வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, பாஜக வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது தான் காஷ்மீரிலிருந்து பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஜக்மோகன் சிங் பாஜக பரிந்துரையின் பேரில், காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் இருந்த போதுதான் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டனர். இப்படியிருக்கும் போது, காங்கிரஸ் பண்டிட்களை வெளியேற்றியது என்று எப்படிக் கூற முடியும். இவர்கள் வரலாற்றைத் திரித்து எழுதப் பார்க்கின்றனர்.

காஷ்மீர் விவகாரம்

ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்ட்கள் வரலாற்றைத் திருத்தி எழுத நினைத்தது போல், மோடி வரலாற்றைத் திரித்து எழுத முயற்சிக்கின்றார். வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியா; ஆனால், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம், அதைக் குலைப்பதாக உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸில் இணைந்த புதிய உறுப்பினர்கள்

காங்கிரஸ் கட்சிக்குக் கூட்டுத் தலைமை தேவையில்லை; ராகுல் காந்தி போன்ற இளம் தலைவர்கள் தான் தேவை. 7 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லை என்றால், காங்கிரஸ் அழிந்துவிடுமா? மேலும், கூட்டுத் தலைமையை தாங்கள் ஏற்கவில்லை. அப்படி சொல்பவர்கள் காங்கிரஸுக்கு விரோதமானவர்கள்.

ராகுல் காந்தி தலைவர்

G-23 என்று காங்கிரஸ் கட்சியில் ஒரு குழுவை அழைக்கிறார்கள். அவர்கள் கூட்டுத் தலைமை வேண்டும் என்று கூறுவதாக சொல்கிறார்கள். நான் கடந்த மூன்று மாதங்களாக, இந்தியா முழுவதும் 2000 காங்கிரஸ்காரர்களிடம் பேசி இருப்பேன். அவர்கள் G-23 என்றால் இவர்கள் G2000. இவர்கள் அனைவரும் ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கருத்து உடையவர்களாக உள்ளனர்.

பெரிய முதலாளிகள் மேயராகக் கூடிய இடத்தில் கும்பகோணத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் மேயராகிரார் என்றால், அது ராகுல் காந்தியால் மட்டுமே சாத்தியமானது.

ராகுல் காந்தி தலைவராகத் தீர்மானம்

மோடியுடன் சமரசம் பேசத்தான் ஆட்கள் உள்ளனர். எதிர்க்கும் ஆற்றல் ராகுல்காந்திக்கு மட்டுமே உள்ளது. ராகுல் காந்தியைத் தான் தலைவராக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பவும் தமிழ்நாடு காங்கிரஸ் தயாராக உள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவது காவிரி ஒப்பந்தத்திற்கு எதிரானது. அங்கு உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்தாலும் தமிழ்நாடு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது' எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் தீர்த்து வைப்பார்

தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் இடப் பங்கீடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், 'கூட்டணி என்பது ஒருவரை ஒருவர் நம்புவது தான். தேர்தலில் ஒரு சில இடங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ள போது, முதலமைச்சர் அவர்கள் ஒரு பெரும் அறிக்கையை வெளியிட்டார். இந்த விஷயத்தில் பிரச்னையைத் தீர்த்து வைப்பார்' என்றார்.

இதையும் படிங்க: மிதமிஞ்சிய போதை; தடம் மாறிய பாதை - தெலுங்கு நடிகை விபத்தில் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.