ETV Bharat / city

காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மேலும் இழுபறி - KS Alagiri byte in Chennai

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மேலும் இழுபறி நீடித்துள்ளது.

காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவரை தேர்ந்தெடுப்பதில் மேலும் இழுபறி

author img

By

Published : May 17, 2021, 4:08 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக, உறுப்பினர்களின் கருத்து கேட்புக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மேலும் இழுபறி

இதற்காக டெல்லியில் இருந்து முக்கியத் தலைவர்கள் இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தனர். ஆனால், இன்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனால் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பையும் புறக்கணித்துள்ளார்.

கூட்டத்திற்கு முன்பான செய்தியாளர் சந்திப்பு:

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "தலைவர் பொறுப்பை தேர்வு செய்ய தான் கூட்டம் நடைபெறுகிறது, கூட்டம் முடிந்த பின் அறிவிப்பு வெளியாகும். இதில் கருத்து வேறுபாடு கிடையாது" என்று கூறினார். தற்போது சட்டப்பேரவைத் தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

போட்டியா, மோதலா?:

முன்னதாக கடந்த 7ஆம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

ஆனால், அதில் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தலைவர் பொறுப்புக்கு விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதரணி, குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் ஆகியோரிடையே போட்டி நிலவுவதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர். சோளிங்கர் தொகுதி எம்எல்ஏ முனிரத்னம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை ஆகியோரும் தலைவர் பதவியைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.