ETV Bharat / city

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் இல்லை - ராதாகிருஷ்ணன் தகவல்! - தமிழ்நாட்டில் ஒமைக்ரான்

விமானம் மூலம் தமிழ்நாடு வந்த கரோனா தொற்றாளர் மூவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்க வாய்ப்பு குறைவு என முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

omicron variant spread, omicron variant, omicron virus in tamil nadu, tamil nadu omicron, tn health secretary radhakrishnan press meet, radhakrishnan press meet, radhakrishnan about omicron variant, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் பேட்டி, ஒமைக்ரான் வகை, ஒமைக்ரான் வைரஸ், தமிழ்நாட்டில் ஒமைக்ரான், தமிழ்நாட்டில் ஒமிக்ரான்
ஜெ ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Dec 4, 2021, 5:34 PM IST

சென்னை: தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ஒமைக்ரான் குறித்து பதற்றம் தேவையில்லை. ஆனால் அதை தடுக்க இரு தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் , தகுந்த இடைவெளி, முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனும் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம்.

கரோனா பல உருமாற்றங்களை கண்டுள்ளது , வரும் நாள்களிலும் மாறுதல் பெறும் பூஸ்டர் தடுப்பூசி குறித்து இந்தியா முழுவதும் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள் கேட்டு வருகின்றனர். மத்திய அரசு மற்றும் மருத்துவ வல்லுநர்கள் இது குறித்து முடிவு செய்வர்.

omicron variant spread, omicron variant, omicron virus in tamil nadu, tamil nadu omicron, tn health secretary radhakrishnan press meet, radhakrishnan press meet, radhakrishnan about omicron variant, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் பேட்டி, ஒமைக்ரான் வகை, ஒமைக்ரான் வைரஸ், தமிழ்நாட்டில் ஒமைக்ரான், தமிழ்நாட்டில் ஒமிக்ரான்

நீலகிரியில் பழங்குடியினர் முழுவதுமாக தடுப்பூசி போட்டுள்ளனர், ஆனால் நகர்ப்புறங்களில் பலர் இப்போதும் தயங்குகின்றனர். ராணிபேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறையில் 70 விழுக்காட்டிற்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் தர்மபுரி, வேலூர், மதுரையிலும் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

கரோனாவில் டெல்டா வகைதான் உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து இதுவரை 20 விமானங்கள் வந்துள்ளன. பாதிப்பற்ற நாடுகளிலிருந்து 85 விமானங்கள் வந்துள்ளன. மொத்தமாக 12,188 பேருக்கு சோதனை செய்துள்ளதில், 3பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்து கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் மூவரும் நலமாக உள்ளனர். இவர்கள் மூவருக்கும் ஒமைக்ரான் இருக்க வாய்ப்பு குறைவு என மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது , இது முதல் கட்ட ஆறுதலை தந்துள்ளது.

18 வயதின் கீழே உள்ளவர்களுக்கான தடுப்பூசி குறித்த ஆய்வு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டதை உறுதி செய்ய , அவரது மாதிரியை ஆய்வுக்கு உள்படுத்தி சோதனை முடிவு கிடைக்க 5 முதல் 7 நாள்கள் ஆகும்.

பச்சிளம் குழந்தைகளுக்கே 12 வகையான தடுப்பூசி நடைமுறையில் இருக்கிறது. சில விசயங்களில் விஞ்ஞானிகளை நம்ப வேண்டும். கரோனாவுக்கு இந்திய மருத்துவத்தின் கபசுரம் உள்ளிட்டவற்றையும் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

ஆர்என்ஏ உருமாறுதல் என்பது இயல்பானதுதான். அனைத்து வகை உருமாறுதலும் பாதிப்பை ஏற்படுத்தாது. தடுப்பூசிக்காக கூவிக் கூவி அழைக்க வேண்டியிருப்பது வேதனையைத் தருகிறது. டெங்குவில் ஒரு உயிரிழப்பு என்றாலும் பெரிய செய்தியாக இருக்கிறது. டெல்டா வகையில் பல உயிரிழப்பு ஏற்பட்டுக் கொண்டிருப்பதை மறந்து விடுகிறோம்.

ஒமைக்ரான் சந்தேகம் உள்ளோரின் மாதிரிகளை தமிழ்நாட்டில் பரிசோதனை செய்கிறோம் , மத்திய வைராலஜி ஆய்வு கூடத்திற்கும் அனுப்பி வருகிறோம். மூன்றாம் அலை வந்தாலும், வராவிட்டாலும் தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது.

ஊரடங்கால் 2 ஆண்டுகள் பட்ட கஷ்டங்கள் போதும், சுயக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை. தற்போது தமிழ்நாட்டில் ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் இல்லை என்றாலும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறும் வலியுறுத்தல்களை பொறுத்து முடிவு செய்வோம்," என்று கூறினார்.

இதையும் படிங்க: Omicron India cases: குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.