சென்னை: நாளை (நவம்பர் 19) நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை 5 மணியளவில் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளதால், மேற்படி மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணித்துள்ளார்.
இதன் காரணமாக, நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது (TN Cabinet Meeting Postponed), அக்கூட்டம் நவம்பர் 20 மாலை 6 மணிக்கு நடைபெறும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தனியார் பள்ளிகளுக்கு இனிமேல் நிரந்தர அங்கீகாரம் கிடையாது'