ETV Bharat / city

பிப். 23இல் தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்

இடைக்கால பட்ஜெட்
இடைக்கால பட்ஜெட்
author img

By

Published : Feb 16, 2021, 12:43 PM IST

Updated : Feb 16, 2021, 2:18 PM IST

12:41 February 16

சென்னை: இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்ய, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வருகின்ற 23ஆம் தேதி கூடுகிறது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல்செய்கிறார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நான்கு நாள்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் பிப்ரவரி 5ஆம் தேதியுடன் முடிந்து தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

மேலும் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையிலிருந்து புறக்கணிப்பு செய்து வெளியேறினர். மேலும் இந்தக் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தனர்.

கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கடந்த 3ஆம் தேதியன்று

  1. இரா. துரைக்கண்ணு அமைச்சர் மறைவு 
  2. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு - பிரபல பின்னணி பாடகர்
  3. மருத்துவர் வி. சாந்தா மறைவு  

ஆகியோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

கடந்த 4ஆம் தேதியன்றுஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மொழியப்பெற்று பேரவையில் விவாதம் நடைபெற்றது.

கடைசி நாளான பிப்ரவரி 5ஆம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின்கீழ் 16.43 லட்ச விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன் தொகை 12,110 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.  

மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தின்போது பதியப்பட்ட சாதாரண வழக்குகள் திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் அறிவித்தார். மேலும் அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராடிய நிலையில் அவர்கள் மீது இருந்த அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்ய, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வருகின்ற 23ஆம் தேதி காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இடைக்கால நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் அன்றைய நாளே தாக்கல்செய்யவுள்ளார்.  

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான நிதியும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அன்றைய நாளே பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூட்டி எத்தனை நாள்கள் பேரவை நடைபெறும் என்று முடிவு எடுக்கப்படும்.

சட்டப்பேரவைக் கூட்டம் மூன்று நாள்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஓ. பன்னீர்செல்வம் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு கடைசி நாள் பதில் அளிக்கிறார்.

கல்விக்கடன் ரத்து, அரசு ஓய்வூதிய வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தி அதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Feb 16, 2021, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.