சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், முதலமைச்சரும் கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் கழகத்தின் மூத்தத் தலைவருமான பொன்னையன் பேசினார்.
அப்போது, “தமிழ்நாட்டில் கருணாநிதியின் ஆட்சி இருண்ட கால கொடுங்கோல் ஆட்சி” என்று விமர்சித்தார். தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
அந்தத் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-
- அனைவருக்கும் வீடு
- மகளிர் பேருந்து சலுகை
- சட்டம் ஒழுங்கில் தமிழகம் அமைதி பூங்கா திகழ நடவடிக்கை
- ரேசன் பொருள்கள் வீடு தேடிவரும்
- வாழ்வாதார உதவியாக வீட்டிற்கு ஆறு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்
- அம்மா வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம்
- கல்விக் கடன் தள்ளுபடி
- கல்லூரி மாணாக்கர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜி டேட்டா இலவசம்
- இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை
- டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சி மையம்
- 100 நாள்கள் வேலை 150 நாள்களாக உயர்த்தப்படும்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 2ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மதியத்துக்குள் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க: அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு