சென்னை: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடங்கப்பட்டன.
முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும். இதுகுறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று(மார்ச்.2) 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்பில் மகேஷ் கூறுகையில், "10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி, மே 30ஆம் முடிகிறது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி முடிகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி முடிகிறது.
இந்த தேர்வுகளுக்கான முழு அட்டவணை http://tnschool.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி 12ஆம் வகுப்பு முடிவுகளும், ஜூலை 7ஆம் தேதி 11ஆம் வகுப்பு முடிவுகளும், ஜூன் 17ஆம் தேதி பத்தாம் வகுப்பு முடிவுகளும் வெளியிடப்படும். இந்த தேர்வை மாணவர்கள் எந்த பயமுமின்றி எதிர்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியீடு