ETV Bharat / city

ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு - நேரில் ஆஜராக அழைப்பாணை

சென்னை: தமிழ்நாடு அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில், பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

stalin
stalin
author img

By

Published : Feb 17, 2020, 4:55 PM IST

Updated : Feb 17, 2020, 5:00 PM IST

உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசை விமர்சித்ததாகவும், தமிழ்நாடு முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் அவதூறு கருத்துகள் தெரிவித்ததாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தரப்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இதேபோல் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விமர்சித்தது என ஸ்டாலினுக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாகப் பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சரை விமர்சித்தது, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அரசை விமர்சித்தது ஆகிய இரு வழக்குகளில் மார்ச் 4ஆம் தேதியும், உள்ளாட்சித் துறை அமைச்சரை விமர்சித்தது தொடர்பான வழக்கில் பிப்ரவரி 24ஆம் தேதியும் நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ‘ஆட்சியில் இருந்தபோது டெல்டாவை ஏன் வேளாண் மண்டலம் ஆக்கவில்லை?’ - திமுகவுக்கு ஈபிஎஸ் கேள்வி

Last Updated : Feb 17, 2020, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.