ETV Bharat / city

கோடை வெப்பத்திலிருந்து பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? - குழந்தைகள் நல மருத்துவர்கள்

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்படாமல் தடுக்க தண்ணீர், பழச்சாறு உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Summer
Summer
author img

By

Published : Apr 6, 2022, 6:41 PM IST

Updated : Apr 7, 2022, 1:42 PM IST

சென்னை உள்பட தமிழ்நாடெங்கும் வெயில் தாக்கம் அதிகரித்து, கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கரோனா தொற்றினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை களைவதற்காக நடப்பாண்டில் பள்ளிகளின் வேலை நாள்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் பொதுத்தேர்வு மே மாதத்தில் நடத்தப்படவுள்ளது. வெயில் காலங்களில் மனித உடலில் ஏற்படும் தோல் நோய் உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பயனுள்ள தகவல்களை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் எழிலரிசி கூறும்போது, "வெயில் காலத்தில் முதலில் நீர்ச் சத்துகுறைவு ஏற்படும். அதனால் முதலில் பச்சிளம் குழந்தைகளுக்கு நீர்சத்து குறைவு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டால் பச்சிளம் குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாய்மார்கள் அடிக்கடி தாய்பால் கொடுக்க வேண்டும். மேலும் தாய்மார்களும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் நீர்ச்சத்து குறைவை தடுக்க முடியும்.

குழந்தைகளுக்கு பருத்தியிலான ஆடைகள் அணிவிப்பதுடன், காற்றோட்டமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பழச்சாறு உள்ளிட்ட நீர் ஆகாரங்களை அளிக்க வேண்டும். பள்ளிக்கு செல்லும் போது, மாணவர்களுக்கு பெரிய பாட்டில்களில் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும்.

குழந்தைகளை காலை, மாலையில் விளையாட விட வேண்டும். வெயில் நேரங்களில் விளையாடுவதை தவிர்க்கலாம் என்று தெரிவித்தார். நோய் பாதிப்பு ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும். டைப்பாய்டு, மஞ்சள் காமலை நோய்கள் பாஸ்ட்புட், திறந்த வெளியில் விற்கப்படும் உணவுகளின் மூலம் பரவுகிறது.

எனவே சுத்தமான உணவுகளையும், எளிதாக சீரணிக்க கூடிய, நார்சத்துள்ள உணவுகளையும் அளிக்க வேண்டும். மேலும் குளிர்பானங்களில் சர்க்கரை, அதிகளவில் கலோரி உள்ளிட்ட உடலுக்கு கெடு விளைவிக்க கூடிய பொருள்கள் அதிகளவில் உள்ளன. எனவே வெளியில் செல்லும் போது பழச்சாறுகளை வாங்கித் தாருங்கள். கோக், பெப்சி போன்றவற்றை தவிருங்கள் எனத் தெரிவித்தார்.

வேர்க்குரு வந்தால் உடலில் சொறசொறப்பு இருக்கும். அப்போது பவுடர் போடுவதை தவிர்த்து விட்டு, களிம்பு போன்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டும் . மேலும் குழந்தைகளை நன்றாக குளிக்க வைக்க வேண்டும். தோலில் சிறியப் பிரச்சினை வந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் தரும்போது, குறிப்பிட்ட அளவில் தண்ணீர் குடித்து விட்டு வர வேண்டும் என கூற வேண்டும். பழச்சாறு போன்றவற்றை குழந்தைகளுக்கு அளிக்கலாம்" எனத் தெரிவித்தார். குழந்தைகள் நல மருத்துவரும் , மாநில குழந்தைகள் ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் சீனிவாசன் கூறும்போது, "கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தினால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

குடிக்கும் தண்ணீராலும் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தண்ணீர் கொதிக்க வைக்காமல் குடிப்பதாலும், சுத்தம் இல்லாமல் குடிப்பதாலும் வயிற்றுப் போக்கு ஏற்படும். மலச்சிக்கல் ஏற்படாத வகையில் பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும்.

கோடைக்காலத்தில் வரும் நோய்கள் அதிகளவில் தண்ணீரால் தான் வருகின்றன. எனவே சுத்தமான தண்ணீரை பருக வேண்டும். மேலும் வெயில் தாக்கத்தினால், தட்டம்மை, சின்னம்மை போன்றவை வரலாம். இதுபோன்ற நோய்களை தவிர்ப்பதற்கு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம்.

குழந்தைகளை காலை, மாலையில் விளையாட அனுமதிக்கலாம். மதியம் உச்சி வெயிலின் போது வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். பருத்தினாலான ஆடைகளை உடுத்திக் கொள்ளலாம். பள்ளிகள் திறந்திருப்பது, மாணவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு உதவும்" என்றும் தெரிவித்தார்.

Last Updated : Apr 7, 2022, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.