சென்னை: சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து பல பேர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி மோசடி விளையாட்டு எனவும் யாரும் விளையாட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மோசடி நடந்து வருவதாகவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிக்கிற போல ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து மோசடியில் சிக்க வேண்டாம் எனவும் இது ஆன்லைன் ரம்மி இல்லை, மோசடி ரம்மி விளையாட்டு என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.
இதனை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்பப் பிரச்சனை மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு டிஜிபி வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: சென்டர் மீடியனில் மோதிய கார்: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி