சென்னை: நங்கநல்லூர் 5வது பிரதான சாலையில் நேற்று டிச.14 ஆம் தேதி சுமார் 10 அடி அகலத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அலுவலர்கள் உடனடியாக அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அந்த சாலையில் பொதுமக்கள் செல்லாத வகையில் இரும்பு பேரிகாடுகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. சாலையை மூடப்பட்டதால், அவ்வழியாக பள்ளிக்குச் செல்லும்
மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பள்ளத்தை சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: வாகனத்திற்கு வழி விடாத அரசுப் பேருந்து - ஓட்டுநரை தாக்கிய இளைஞர் கைது