ETV Bharat / city

பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதி பேரம்: உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம் - சிறைத்துறை டிஜிபி நடவடிக்கை

பப்ஜி மதனுக்குச் சிறையில் சொகுசு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ரூ.3 லட்சம் கையூட்டு கேட்ட புழல் சிறையின் உதவி ஜெயிலர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனடிப்படையில் சிறைத் துறை டிஜிபியின் உத்தரவின்பேரில் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு, புழல் மத்திய சிறை உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பப்ஜி மதன்
பப்ஜி மதன்
author img

By

Published : Feb 5, 2022, 3:00 PM IST

சென்னை: பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாசமாகப் பேசி சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்டதாக பப்ஜி மதனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மதன் மீது ஆபாசமாகப் பேசுதல் உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது மனைவி கிருத்திகாவும் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துவிட்டார்.

சிறை கைதி பப்ஜி மதன்

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குண்டர் சட்டத்தை அறிவுரை கழகமும் உறுதிசெய்தது. குண்டர் சட்டத்தை எதிர்த்து பப்ஜி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனுக்கு கடந்த டிசம்பர் மாதம் சிறைக்குள் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

வைரலாகும் ஆடியோ

இந்த நிலையில், சிறைக்குள் பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக, அவரது மனைவி கிருத்திகா சிறைக்குள், புழல் சிறையின் விசாரணை கைதிகளின் சிறை பொறுப்பாளர் உதவி ஜெயிலர் செல்வம் என்பவரிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

வைரலான ஆடியோ

அந்த ஆடியோவில், நான் கிருத்திகா பேசுறேன். பணம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. சேலத்தில் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. எனக்கு இரண்டு நாள்கள் அவகாசம் வேண்டும் என்று கிருத்திகா பேசினார்.

அதற்குச் செல்வம், இது தொடர்பாக மதன் தெரிவித்தார் என்று கூறினார். "ரூ. 3 லட்சம் அதிகம் என்பதால் காலதாமதம் ஆகிறது. மதனை தனிப்படுத்தப்பட்ட இடத்தில் பார்த்துக் கொள்ளுங்கள். பணம் ரெடியான பிறகு போன் செய்வதாக கிருத்திகா பேசுகிறார். அதற்கு அவர், பிரச்சினை இல்லை. பணம் ரெடி பண்ணி விட்டுச் சொல்லுங்கள்" என்று உதவி ஜெயிலர் செல்வம் பேசிய ஆடியோ வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வைரலாகும் மற்றொரு ஆடியோ

இதைப் போல, மற்றொரு ஆடியோ ஒன்றும் வைரலாகிவருகிறது. அதில் உதவி ஜெயிலர் செல்வத்திடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பேசுகிறார். அதில், "ஆதாரம் இல்லை என நினைக்காதீர்கள். கிருத்திகாவின் வழக்கறிஞருக்குப் போன் செய்தீர்களா? கிருத்திகாவிற்குப் போன் செய்தீர்களா? லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பிவிடவா? டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு அனுப்பிவிடவா? என்னுடைய வேலை முடிந்து போய்விட்டது.

யாரும் இங்குத் தவறு செய்யாமல் இல்லை. நான் கிருத்திகாவுடன் பேசும் ஆடியோவைப் பெரிதாக நினைத்தால் செய்துவிடுவேன். எத்தனையோ விஷயத்தில் சிக்கியுள்ளீர்கள். ஆதாரம் இல்லாததால் தப்பிவிட்டீர்கள்.

ஆனால், இதில் வசமாகச் சிக்கிவிட்டீர்கள். ஆதாரம் வெளியே வந்தால் உங்கள் வாழ்க்கையே முடிந்துவிடும். தேர்தல் நேரத்தில் பலர் வெறிகொண்டிருக்கிறார்கள். நான் உங்கள் நலனுக்காகச் சொல்கிறேன். என்ன பண்ணணுமோ பண்ணிவிடுங்கள்; பேசி முடித்துவிடுங்கள். இல்லையென்றால் நாளை காலை செய்தி அடித்து எங்கே அனுப்பனுமோ அங்கு அனுப்புவேன்.

இந்த விஷயத்தைப் பெரிதாக்க வேண்டாம்; நேராகச் சந்தியுங்கள். உங்களைப் பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையில் பேசப்படுகிறது. வாட்ஸ்அப் காலில் பேசும்போது எப்படி ரெக்கார்டு ஆகும். எனக்கும் மனசாட்சி இருக்கிறது. பிரச்சினையை முடிக்கணும்னா ஆளை எங்கே அனுப்பனும் சொல்லுங்க" என்று மிரட்டுகிறார்.

கூகுள்பே மூலம் லஞ்சம் அனுப்பப்பட்டதற்கான ஆதாரம்

இதற்கு உதவி ஜெயிலர் செல்வம், "தனக்கு குடும்பம் இருக்கிறது. விடுமுறை எடுத்துவந்து சந்திக்க இயலாது. பிரச்சினையை முடித்து விடும்படி அவர் கெஞ்சுகிறார். இந்த இரண்டு ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவுகிறது.

சிறைத் துறை டிஜிபி விசாரணை

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் துறை ரீதியிலான விசாரணை நடத்த சிறைத் துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டார். சிறைத் துறை டிஐஜி தலைமையில் விசாரணை நடத்தக் குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டார்.

புழல் சிறையில் விசாரணை கைதிகளை கரோனா தனிமைப்படுத்தல் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காகப் புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வம் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில்தான் பப்ஜி மதன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மீண்டும் சிறைக்கு வந்தபோது தனிமைப்படுத்தப்பட்டார்.

கூகுள்பேயில் லஞ்சம்

அப்போதுதான் வசதிகள் செய்து கொடுப்பதற்காக லஞ்சம் கேட்டதாக உதவி ஜெயிலர் செல்வம் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக கூகுள்பே மூலமாகப் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

துறை ரீதியிலான விசாரணை நடந்து வரக்கூடிய சூழ்நிலையிலும், கையூட்டு வாங்கியது நிரூபணமாகியதால் உதவி ஜெயிலர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டார்.

குறிப்பாக நீதிமன்றத்தில் சிறையில் அடைக்க உத்தரவு வந்தவுடன், கரோனா பரிசோதனை செய்து சிறையில் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைத்து, அதன்பிறகு சாதாரண அறையில் அடைப்பது வழக்கம். தனிமைப்படுத்தும் அறையில் நல்ல கவனிப்பு கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

பப்ஜி மதனுக்கு ஏற்கனவே உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டதால், தனிமைப்படுத்தல் அறையிலேயே மதனைக் கவனித்துக் கொள்ளும்படி, அவரது மனைவி கிருத்திகா கேட்டபோது, அந்த அறையின் இன்சார்ஜ் உதவி ஜெயிலர் செல்வம் ரூ.3 லட்சம் வரை கையூட்டு கேட்டதாகப் புகாருக்குள்ளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உரிய நடவடிக்கை தேவை

ஏற்கனவே, சிறைகளில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அதிகளவு புகார்கள் டிஜிபிக்கு வருவதால் திடீர் சோதனையானது மேற்கொள்ளப்பட்டு செல்போன், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்வது வழக்கமாக இருந்துவருகின்றன.

இதையும் படிங்க: சிறையில் சொகுசு கேட்கும் பப்ஜி மதன்: மனைவியிடம் கையூட்டு கேட்ட அலுவலர் - வைரலாகும் ஆடியோ!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.