ETV Bharat / city

முன்களப் பணியாளர் ஒருவர் கூட விடுபட மாட்டார்கள் - சு.வெ., கடிதத்திற்கு ஹர்ஷவர்தன் பதில் - MADURAI

கரோனா முன்களப் பணியாளர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு தூய்மை பணியாளர்கள் கூட விடுபட மாட்டார்கள் என எம்.பி., சு.வெங்கடேசன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

சு வெங்கடேசன்
முன்களப் பணியாளர் ஒருவர் கூட விடுபட மாட்டார்கள்
author img

By

Published : Jun 9, 2021, 2:47 PM IST

மதுரை: மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கரோனா முன்களப் பணியாளர் காப்பீடு தொடர்பாக இன்று (ஜூன் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில்:

இரண்டு கேள்விகள்

"ஒன்றிய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்களிடமிருந்து ஜூன் 1ஆம் தேதியிட்ட கடிதம் வந்துள்ளது. இது நான் ஏப்ரல் 20ஆம் தேதி அன்று கரோனா முன்களப் பணியாளர் காப்பீடு பற்றி நான் எழுப்பிய கோரிக்கைக்கு தரப்பட்டுள்ள பதில். கீழ்வருமாறு

நான் இரண்டு பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். இரண்டிற்கும் தீர்வு கிட்டியுள்ளது.

காப்பீட்டுத் திட்டம் பாதுகாப்பு வளையம்

1) இதற்கான பாலிசி கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதி அன்று புதுப்பிக்கப்பட்டது. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அவர்களின் கடிதம் (மார்ச் 24), அமைச்சகத்தின் ட்விட்டர் செய்தி (ஏப்.24) இரண்டிற்குமான வார்த்தைகள் ஒன்றுக்கொன்று வேறுபடுவதாய், இந்த இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்குமா என்ற ஐயத்தை எழுப்புவதாய் இருந்தன.

  • கோவிட் முன்களப்பணியாளர்கள் காப்பீட்டில் மார்ச்25 லிருந்து ஏப்ரல் 23 வரை எழுகின்ற உரிமைகளை உள்ளடக்கியவர்கள் உட்பட ஒருவர் கூட விடுபடமாட்டார்கள்.

    எனது கடிதத்திற்க்கு ஒன்றிய அமைச்சர்
    ஹர்ஷவர்தன் பதில். @drharshvardhan #Covid19 #frontlineworkers pic.twitter.com/k4OduPh1Gy

    — Su Venkatesan MP (@SuVe4Madurai) June 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஒரு முன்களப் பணியாளருக்கு கூடக் காப்பீடு பயன் கிடைக்காமல் போய் விடக் கூடாது, அரசு அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டுமென எனது ஏப்ரல் 20ஆம் தேதி கடிதத்தில் கோரியிருந்தேன். ஒன்றிய சுகாதார அமைச்சரின் பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இதோ அவரது கடிதத்தில் இருந்து:

"ஏப்ரல் 24, 2021 அன்றைய தேதியில் இருந்து நடப்பிற்கு வருவதாக 180 நாள்களுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பணிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் சார்ந்தோருக்கு பாதுகாப்பு வளையமாய் அமையும். மேலும் மார்ச் 25-இருந்து ஏப்ரல் 23-க்குள்ளாக எழுகின்ற உரிமங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்."

ஒருவர் கூட விடுபடமாட்டார்கள்

சுகாதார அமைச்சரின் இவ்விளக்கம் பாதிக்கப்பட்ட ஒரு முன்களப்பணியாளர் கூட விடுபட மாட்டார் என்ற உறுதியை தந்துள்ளது. இக்காலத்தில் - அதாவது மார்ச் 25இல் இருந்து ஏப்ரல் 23க்கும் இடையில்- பாதிக்கப்பட்டவர்கள் உரிமப் பட்டுவாடாவில் சிரமங்கள் இருப்பின் இக்கடிதத்தை பயன்படுத்தவும், உதவிகள் தேவைப்படின் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்கிறேன்.

புதிய படிவம்

2) உரிமப் பட்டுவாடாவில் உள்ள தாமதங்கள் களையப்பட வேண்டுமென்றும் எனது கடிதத்தில் கோரி இருந்தேன்.

ஆவணங்கள் போதாமையால் அத்தகைய தாமதங்கள் ஏற்படுவதாகவும், அதைக் களைய மாவட்ட ஆட்சியரே, உரிமங்களின் மெய்த் தன்மையை உறுதிப்படுத்துகிற படிவமொன்றை வடிவமைத்து, புதிய முறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இதில் சிரமங்களை எதிர் கொள்பவர்களும் இந்த தகவலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

இதையும் படிங்க: பழங்குடியின மக்களின் கடவுள் 'பிர்சா முண்டா'!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.