திருவள்ளூர்: பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் மேல் நிலைப்பள்ளியில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று (ஜூன் 13) வழக்கம்போல பள்ளி திறக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் மானவ-மாணவியர்களை உற்சாகமாக இனிப்புகள் வழங்கி வரவேற்று வருகின்றனர்.
ஆனால் முதல் நாள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்த மாணவர்களை, கட்டணம் செலுத்த வில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டனர்.
இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு: கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும் - மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..