சென்னை: கரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பேருந்துகளில் மாணவர்கள் சீருடையுடன், கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளிகள் திறக்கப்பட்டு பஸ் பாஸ் வழங்க சில வாரங்கள் ஆகும் நிலையில் இந்த அறிவிப்பினை போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
மேலும், ஐடிஐ, தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பேருந்து நடத்துனரிடம் காண்பித்து தத்தமது, கல்வி நிறுவனங்கள்வரை கட்டணமின்றி சென்றுவரலாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடாவிட்டாலும் அந்தப் பள்ளி திறக்கப்படாது'