ETV Bharat / city

'சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு' - உயர் நீதிமன்றம் தள்ளுபடி - Stay for collect hike fees in toll gates, petition dismissed

சென்னை: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai highcourt
chennai highcourt
author img

By

Published : Apr 27, 2020, 3:04 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டது. பின்னர், மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேலும், சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், ஐந்து முதல் 12 விழுக்காடு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனால் விவசாய பொருட்களை கொண்டுச் செல்லும் போது, கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலித்தால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதால், ஊரடங்கு முடியும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

chennai highcourt
chennai highcourt
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் அடங்கிய அமர்வு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரித்தது. அப்போது, "இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல், சுங்கக் கட்டணம் வசூலிக்க சட்டம் அனுமதிப்பதாகவும், சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டியது நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் கடமை எனவும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக மனுதாரர் கோரிக்கை மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையேற்ற நீதிபதிகள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து, அந்த மனுவை விரைந்து பரிசீலித்து முடிவெடுக்க நெடுஞ்சாலை துறை ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.