சென்னை: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகி டெய்சி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், "மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்களும், அதன் உதவியாளர்களும் கலந்துகொள்ளும் பெருந்திரள் போராட்டம் தரமணியில் நாளை (பிப்ரவரி 5) நடைபெறும். 33 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் நாங்கள், இப்பணிகள் மட்டுமில்லாமல் பிறதுறை பணிகளையும் செய்துவருகிறோம்.
போலி மணல் தயாரித்து விற்ற ஐந்து பேர் கைது!
அரசுக்கு இந்தளவு பணிபுரிந்தும் ஊழியர்கள் இன்னும் நிரந்தரம் செய்யவில்லை. நாங்களும் அரசு ஊழியர்களை ஆகவேண்டும், ஓய்வூதியம் வழங்கவேண்டும், பணிச்சுமை குறைக்கவேண்டும் என்ற 3 கோரிக்கைகளை முன்னிறுத்தி பெருந்திரள் போராட்டம் நடத்தவுள்ளோம்.
இப்போராட்டத்தில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் எங்கள் சங்கம் சார்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துகொள்வார்கள். சுமார் 25 ஆயிரம் பேர் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட போராட்டத்தில் அமைச்சர் அழைத்துப் பேசினார். ஆனால் முடிவு எட்டப்படவில்லை. எனவே, முதலமைச்சர் உடனடியாக எங்களை அழைத்துப் பேச வேண்டும். இல்லையேல் போராட்டங்கள் தொடரும்” எனத் தெரிவித்தார்.