சென்னை: தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியாவில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்விற்கு இயற்பியல், வேதியியல், உயிரியியல் ( தாவரவியல், விலங்கியல் ) ஆகியப் பாடங்களில் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மேலும் ஒவ்வாெருப் பாடத்திலும் கூடுதல் வாய்ப்பாக 15 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கான தேர்வு ஜூலை மாதம் 17 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி 20 நிமிடம் வரையில் நடைபெறும். தேர்விற்கான வினாத்தாள்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது ஆகிய 13 மாெழிகளில் அளிக்கப்படும்.
தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு 1,600 ரூபாயும், பொதுப்பிரிவினரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 1,500 ரூபாயும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு 900 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வுக் குறித்த விபரங்களை https://neet.nta.nic.in, https://www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக் கொண்டு விண்ணப்பிக்கலாம். தேர்வுகளுக்கான இணையதள முகவரி மற்றும் செல்போன் எண்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தேசிய தேர்வு முகமை தொடர்புகளை இமெயில், எஸ்எம்எஸ் மூலம் அளிக்கும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும்!