ETV Bharat / city

'ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பைச் சட்டமாக்க வேண்டும்' - ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவை சட்டமாகப் பிறப்பிக்க வேண்டும் என்றும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் தீர்ப்பிற்குத் தடை ஏதும் விதிக்கப்படாமலிருக்க உடனடியாக 'கேவியட்' மனுவினைத் தாக்கல்செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

stalin sterlite judgement statement
stalin sterlite judgement statement
author img

By

Published : Aug 18, 2020, 1:27 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும் என்று உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து, தீர்ப்பின் மீதான தங்களின் பார்வையை அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்திவருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் இந்தத் தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில், "ஸ்டெர்லைட் வழக்கில் மக்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மகத்தான-மனிதகுலத்தினைக் காக்கும் தீர்ப்பாகும்.

மேலும் சுற்றுப்புறச்சூழலுக்கும்–தங்களின் பாதுகாப்பிற்கும் பேராபத்தாக இருந்த ஆலையை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடிய அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 உயிர்கள் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதுவரை இதற்கு நியாயம் கிடைக்காதது வேதனையளிக்கிறது. தாமதமாகும் நீதி, மறுக்கப்படும் நீதி ஆகிவிடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மறையா வடுவான ஸ்டெர்லெட் படுகொலை
மறையா வடுவான ஸ்டெர்லைட் படுகொலை

மேலும், முதலமைச்சர் பழனிசாமி இன்றே அமைச்சரவையைக் கூட்டி- உயர் நீதிமன்றத்தின் முழுத் தீர்ப்பினையும் அமைச்சரவைத் தீர்மானமாகவே வெளியிட வேண்டும்.

மக்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி- ஸ்டெர்லைட் ஆலை மூடுவதை அமைச்சரவையில் சட்டமாகப் பிறப்பிக்க வேண்டும்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தமிழ்நாடு அரசைக் கேட்காமல் இந்தத் தீர்ப்பிற்குத் தடை ஏதும் விதிக்கப்படாமலிருக்க உடனடியாக 'கேவியட்' மனுவினைத் தாக்கல்செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க; 'ஸ்டெர்லைட் விவகாரத்தில் மனிதம் காத்த தீர்ப்பு' - அரசியல் ஆளுமைகளின் கருத்து

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.