ETV Bharat / city

இந்து சமய அறநிலையத்துறை சார்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.43.68 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.9.67 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

author img

By

Published : Jun 10, 2022, 8:25 PM IST

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று(ஜூன் 10) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக ரூ.43.68 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில்களில் திருமண மண்டபம், திருக்குளப்பணிகள், வைணவ பிரபந்த பாடசாலை, பக்தர்கள் தங்கும் மண்டபம், கம்பிவட ஊர்தி கீழ் நிலையம், திருக்கோயில் பள்ளிகள் கூடுதல் கட்டடம்,

வணிக வளாகம் போன்ற புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில்களில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், வணிக வளாகம், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் ஓய்வுக்கூடம், திருக்குளம் புதுப்பித்தல், திருமண மண்டபம், வாகனப் பாதுகாப்பு மண்டபத்துடன் கூடிய அலுவலகக் கட்டடம் போன்ற முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், ரூ.14.76 கோடி மதிப்பீட்டில் வீரவசந்தராயர் மண்டபம், திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிகள்; செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், ஆன்மிகச் செம்மல் ஆளவந்தார் அறக்கட்டளையில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வைணவ பிரபந்த பாடசாலை கட்டும் பணி;

சென்னை கொசப்பேட்டை அருள்மிகு கந்தசாமி மற்றும் ஆதி மொட்டையம்மன் திருக்கோயிலில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; மாதவரம் அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புது திருக்குளம் அமைக்கும் பணி; விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் மின் இணைப்பு வசதி உள்ளிட்ட மொத்தம் 43 கோடியே 68 லட்சத்து 80ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திருக்கோயில் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் ரூ.2.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம், பக்தர்கள் ஓய்வுக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி; கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருள்மிகு இளமையாக்கினார் திருக்கோயிலில் ரூ.2.62 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட திருக்குளம்; மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பதினெட்டாம்படி கருப்பணசுவாமி திருக்கோயிலில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம்;

இந்து சமய அறநிலையத்துறை சார்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

மயிலாடுதுறை மாவட்டம், கும்பகோணம், இன்னம்பூர் அருள்மிகு எழுத்தரிநாதர் திருக்கோயிலில் ரூ.63 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்,விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ரூ.61 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறை மற்றும் குளியல் அறைகள், உள்ளிட மொத்தம் 9 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற திருக்கோயில் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: நயன் - விக்கியின் புகைப்படகலைஞர்கள் திருப்பதி ஆலயத்தில் செருப்புடன் சென்றனரா?: தேவஸ்தானம் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.