ETV Bharat / city

‘பெண்ணினமே எழு!’ - திமுக தலைவர் ஸ்டாலின் பெண்கள் தின வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் தின வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார்.

Stalin Women's day wish
Stalin Women's day wish
author img

By

Published : Mar 8, 2020, 1:15 PM IST

பெண்கள் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மார்ச் - 8 உலக உழைக்கும் மகளிர் தினம்! சமூகத்தின், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! பெண்ணைப் போற்றுதலில் இல்லை பெருமை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம். உரிமை என்பது கொடுப்பது அல்ல; அவர்களாகவே எடுத்துக் கொள்வதில் இருக்கிறது. "இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!" என்று அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம் உலகுக்கு! பெண்ணே வாழ்க!" என்று பெண்கள் தினத்திற்கு தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

  • சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    பெண்களைப் போற்றுதலில் இல்லை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்!

    "இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!" என்று, அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்!

    பெண்ணே வாழ்க!#WomensDay pic.twitter.com/qZ5887ys2W

    — M.K.Stalin (@mkstalin) March 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

திமுக மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், "பெண் சிசுக்கொலைகள், குழந்தைகள் மீதான வன்முறை, கல்வி மறுப்பு, உரிமை மறுப்பு, குடும்ப வன்முறை, பாலியல் கொடுமை இவை அனைத்தும் ஒழித்து விடுதலை காண்போம்" என தெரிவித்துள்ளார்.

  • தாயாய் மனைவியாய் சகோதரியாய் மகளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்காமல், பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும். #HappyWomensDay2020 pic.twitter.com/8bYEfvdW57

    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது போன்று பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள் பெண்கள் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நமக்குத் தேவை சிங்கப் பெண்கள் அல்ல... புரட்சிப் பெண்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.