ETV Bharat / city

கிரிக்கெட் வீரர்களை தோளில் சுமக்கிறார்களே... அதுபோலத்தான் இது... ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்...

கிரிக்கெட் வீரர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வெற்றி பெற்றவுடன் தோளில் சுமக்கப்படுகிறார்கள். அது போலத்தான் பட்டினப்பிரவேசம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்தார்.

author img

By

Published : May 7, 2022, 3:15 PM IST

Updated : May 7, 2022, 4:11 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர்.

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இன்று (மே 7) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "பட்டினப்பிரவேசம் செய்ய தடை விதித்திருப்பது மனவேதனை அளிக்கிறது. ஆதீனங்கள், மடாதிபதிகள் விவகாரத்தில் யாரும் தலையிட கூடாது. இதைச் செய்ய கூடாது என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.

விரைவில் முதலமைச்சரை சந்திப்போம்: பட்டினப் பிரவேசம் சம்பந்தமாக மடாதிபதிகள் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளோம். தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆன்மீக விஷயத்தில் தலையிடுவதால் கெட்ட பெயர் உண்டாகும். அரசு உறுதியாக பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம்.

கிரிக்கெட் வீரர்களை தோளில் சுமக்கிறார்களே... அதுபோலத்தான் இது... ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்...

யாருக்கும் உரிமையில்லை: இந்த விவகாரம் தொடர்பாக மன்னார்குடி ஜீயர், அமைச்சர்களை நடமாட முடியாது எனக் கூறியது. அவருடைய சொந்தக் கருத்து. மதுரை ஆதீனம் கொலை மிரட்டல் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்து பாதுகாப்பு கேட்டு முறையிட வேண்டும். மனிதனை மனிதன் சுமக்கக்கூடாது என்ற விமர்சனத்திற்கு, கிரிக்கெட் வீரர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெற்றி பெற்றவுடன் தூக்கிச் சென்று தோளில் சுமக்கிறார்கள். அது போலத்தான் இது" என்றார்.

இதையும் படிங்கள்: காயத்ரி ரகுராம் பதவி பறிப்பு; பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியல்!

Last Updated : May 7, 2022, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.