ETV Bharat / city

'காலில் விழுந்தே கிடப்போம்' என்று தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறது அதிமுக - ஸ்டாலின் தாக்கு

'உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்று இருந்த தமிழ்நாட்டை, 'காலில் விழுந்தே கிடப்போம்' என்ற தமிழ்நாடாகவும், கொள்கைவாதிகள் ஆண்ட தமிழ்நாட்டை, கொள்ளைவாதிகள் ஆளும் தமிழ்நாடு என்று பெயர் வாங்கியும் கொடுத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சியிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்” என சோளிங்கரின் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

author img

By

Published : Jan 31, 2021, 6:38 AM IST

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்

ராணிபேட்டை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சோளிங்கரில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறை கேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களின் குறைகளைத் தீர்க்கக் கோரி அப்பகுதி மக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டும், நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “முதலில் உங்களுக்கு எல்லாம் என்னுடைய நன்றியை, வணக்கத்தை மிகுந்த மகிழ்வோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இப்போது, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் ஒரு பரப்புரை வியூகத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். நேற்றிலிருந்து தொடங்கியுள்ள இந்த பயணத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தப்போகிறேன்.

நேற்று மாலை இதேபோல ஆரணிக்குச் சென்றிருந்தேன். அங்கு எழிலரசி என்ற சகோதரியை நாங்கள் பேச வைத்தோம். அப்போது அவர் சிலிண்டர் வெடித்ததில் அவரது அம்மா இறந்து விட்டதாகச் சொன்னார். அவர்களுக்கு நிதி உதவியாக ரூ.2 லட்சம் கொடுக்கப்படும் என்று அரசு சார்பாக அறிவித்து விட்டார்கள். இதுவரையில் உதவித் தொகை வந்து சேரவில்லை என்றும், பலமுறை மனு அளித்தும் பயனில்லை என்றும் அந்தச் சகோதரி உருக்கத்துடன் சொன்னார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்

நான் உடனே அவரிடம், ‘கவலைப்படாதீர்கள், ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் குறைகள் தீர்க்கப்படும் என்பது நாம் வகுத்திருக்கும் திட்டம். ஆனால் உங்கள் பிரச்னை அதில் அடங்காது; உடனடியாக உங்கள் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்’ என்று சொன்னேன்.

இது ராணுவம் சம்பந்தப்பட்ட கோரிக்கை என்பதால், அந்த நிகழ்ச்சி முடிந்ததும், காரில் சென்று கொண்டிருக்கும் போதே நான் டெல்லியில் இருக்கும் டி.ஆர்.பாலுவை தொடர்பு கொண்டேன். அவர் நேற்று இரவே இதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். அதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.

இந்தச் செய்திகள் இங்குள்ள அரசுக்குத் தெரிந்துவிட்டது. நாம் நடத்துகிற நிகழ்ச்சியை நம்மை விட அ.தி.மு.க.வினர்தான் அதிகமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அமைச்சர்கள் குறித்து விமர்சனம் செய்வதால் அந்த அமைச்சர்கள் தான் அதிகமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதைப் பார்த்துவிட்டு இரவில் அந்தப் பெண்ணை அழைத்துக் கூடக் கொடுக்கவில்லை, அவரது வங்கிக் கணக்கில் 2 லட்சம் ரூபாயைச் செலுத்தி விட்டார்கள். “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சிக்கு இதை விடப் பெரும் வெற்றி வேறு ஏதும் தேவையில்லை. இதுவே பெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது.

எனவே, நீங்கள் கவலைப்படவேண்டாம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இவ்வளவு பணிகளைச் செய்கிறோம். ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதை நினைத்துப் பாருங்கள். அந்த நம்பிக்கையோடு நீங்கள் மனுக்களைக் கொடுத்து இருக்கிறீர்கள். அந்த மனுக்கள் இந்தப் பெட்டியில் போடப்பட்டுள்ளது. இப்போது நான் பெட்டியை மூடி, பூட்டு போட்டு, அதற்குப் பிறகு சீல் வைத்து அதை என்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துச் செல்வேன்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
தாமி எடுத்துக்கொள்ளும் ஸ்டாலின்

இதன் சாவி என்னிடம் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் அன்போடு, ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு 100 நாட்களில் இதில் இருக்கும் மனுக்களில் உள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

'உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்று இருந்த தமிழ்நாட்டை 'காலில் விழுந்தே கிடப்போம்' என்ற தமிழ்நாடாக மாற்றிவிட்டார்கள். கொள்கைவாதிகள் ஆண்ட தமிழ்நாட்டை கொள்ளைவாதிகள் ஆளும் தமிழ்நாடு என்று பெயர் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.

இவற்றைக் காண சகிக்காமல் தான் தமிழ்நாட்டை மீட்க நாம் கிளம்பி இருக்கிறோம். இதனை நாம் அனுமதிக்க முடியாது. இந்த தமிழ்நாடு என்பது கழகம் உருவாக்கியது. கழகம் உருவாக்கிய தமிழ்நாட்டை உருக்குலைக்க நாம் விட மாட்டோம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் தரும் அரசை திமுக அமைக்கும்.

இந்த அரங்கத்திற்குள் நீங்கள் வரும்போது கொண்டு வந்த படிவங்களை இங்கே கொடுத்திருக்கிறீர்கள். இதை படிவங்களாக நான் பார்க்கவில்லை. என் முதுகில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பாரமாகத்தான் கருதுகிறேன். அந்த பாரத்தை என்னை நம்பி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கையோடு செல்லுங்கள்.

திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் இந்தக் கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். தி.மு.க. ஆட்சிதான் அமையும்... உங்கள் கவலைகள் யாவும் தீரும் என்ற வாக்குறுதியை மீண்டும் உங்களுக்கு வழங்கி விடைபெறுகிறேன்” என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.